December 23, 2008

மலையாள சினிமாவுக்கு ஒரு முன்னெச்சரிக்கை!

மலையாள சினிமாவுக்கு ஒரு முன்னெச்சரிக்கை!

'தமிழர்களுக்கு உங்கள் கதைகளை விற்காதீர்கள்!'
தமிழ் சினிமாவுக்கு ஒரு முன்னெச்சரிக்கை!
'மலையாளிகளிடம் கதை வாங்காதீர்கள்!'
இந்த இரண்டு எச்சரிக்கைகளையும் மீறுவதால் என்ன நடந்துவிடும்? பெரிதாக எதுவும் நடந்துவிடாது. 'மலையாளிகள் மேதைகள் என்பதையும் தமிழர்கள் தற்குறிகள் என்பதையும் உலகம் புரிந்துகொண்டுவிடும். அவ்வளவுதான்!'

Read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=723

December 16, 2008

சீட்டுக்கோட்டை சிங்காரம்!


எல்லிஸ் டங்கன் காலத்தில் கேமராவைப் பார்க்க விரும்பினால் ஸ்டுடியோவுக்குத்தான் போகவேண்டிய நிலை இருந்தது. கதைகளும், கோட்டைகளிலும் கொத்தளங்களிலும் ஐந்தாளுயரத் தூண்கள் சார்ந்த பகுதிகளிலும் நிகழ்வதாயிருந்தன. வெளிப்புறக் காட்சி தேவைப்படின் வண்டி வண்டியாக மணல் கொட்டப்பட்டு உருவாக்கப்பட்ட குளக்கரைகளிலும் செயற்கைப்புல் பதித்த நந்தவனங்களிலும் தங்கள் திறமையைக் காட்டினார்கள் தச்சர்கள். திரைச்சீலைகள் தத்ரூபமாக வரையப்பட்டன. நிலவும் மேகமும் வரைந்து வரைந்து அவர்கள் சோர்ந்துபோயிருக்கவேண்டும். திரும்பத்திரும்பத் தேவைப்படுபவையாக அவை இருந்த காலம் அது.

அத்திக்காய் காய் காய் என்று சிவாஜி பாடும்போது அந்தத் திரைச்சீலைக்கு முன்னால் ஓர் அறையின் சுவர் உருவாக்கப்படுகிறது. பாலாஜி பாடும்போது அதே திரைச்சீலைக்கு வேறொரு சுவரும் ஜன்னலும் தேவைப்படுகிறது. பாதி ஜன்னலை மூடிவைத்தால் பாதி நிலவு கேமராவுக்குத் தெரிகிறது. ஒரிஜினல் நிலவையும் கதவையும் வைத்து இப்படியொரு காட்சி எடுக்க வேண்டுமானால், ஒருசில கோவில்களில், வருடத்தில் ஒரு நாள் மாத்திரம் மூலஸ்தானம் வரைக்கும் சூரியன் நுழைகிறதே, அதுமாதிரி காத்திருக்கவேண்டும்.

Read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=693

December 08, 2008

காஸ்ட்யூமரை நிர்வாணமாக்கும் கலை!

தமிழ்த் தேயம் நிர்வாணத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது. என்னதான் போதிசத்வர் நார்த் இண்டியன் என்றாலும் சித்தர்களின் ஆளுமை ஒரு காலத்தில் இந்தத் தேயத்தில் இருந்த வகையில் மகா நிர்வாணத்தை நோக்கி இது நகரும் என்று ஒரு நப்பாசை இருந்தது. ஆனால் அவர்களுக்குத் தெரியாது, சினிமா என்று ஒரு மாயையில் இத்தேயம் சிக்குறும் என்பதும், அது மகாவைக்கூட நிர்வாணமாக்க முயலும் என்பதும். நிர்வாணமே சாத்தியமில்லாதபோது மகாநிர்வாணம் எப்படி சாத்தியமாகும்?

நிர்வாணம் மிகமிக அழகானது அல்லது மிக மிக அசிங்கமானது. அதை எந்த வகைமையில் சேர்க்கலாம் என்பது சம்பந்தப்பட்ட உடலைப் பொறுத்தே அமைகிறது. சிங்கத்தின் நிர்வாணம் எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறது! அதே நேரத்தில் கவர்ச்சி நடிகை ஷகீலாவின் நிர்வாணம் முழுமையாக உங்களுக்குக் காணக் கிடைத்தால் அது கண்டிப்பாக, கவர்ச்சிக்கு பதிலாகக் குமட்டலையே ஏற்படுத்தக்கூடும். ஏனென்றால் க்ளிவேஜின் பிதுங்கலில் உள்ள கவர்ச்சி, தொய்ந்த மார்பகங்களிலும் இடுப்புச் சதைகளிலும் இல்லவே இல்லை. இதுவே சினிமாவின் அடிப்படை மொழி!
Read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=635

December 04, 2008

அடி உதவுகிற மாதிரி

அடி உதவுகிற மாதிரி அக்கா தங்கைகூட உதவுவதில்லை என்று பெண்பால் பழமொழி ஒன்று உண்டு. அது யாருக்கு செல்லுபடியாகிறதோ இல்லையோ, சினிமாவுக்கு மட்டும் சரியாகப் பொருந்தி வருகிறது.

ப்ரூஸ்லீ நடித்து வெளியான என்டர் தி டிராகன், ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி ஆகிய ஆங்கிலப் படங்களைத் தமிழ்ப்படங்கள் என்பதாகவே கொள்ளலாம். எம்ஜியார், சிவாஜி படங்களைவிட பிரமாதமாக அவை தமிழ்நாட்டில் ஓடின. அவற்றைப் பார்க்காத இளைஞர்களே அந்த சமயத்தில் இருந்திருக்க முடியாது.

வகைதொகையில்லாமல் அடிப்பதற்கு பதிலாக முறையாக அடிப்பதற்கு, 'வெறும் கரத்தால்' எனும் பொருள்படும் கராத்தே என்கிற கலை மூலமாக பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திய படம் அது. அப்படி ஒரே அடியில் எதிரியை சாய்த்துவிட முடியுமா என்று கேட்டால் ப்ரூஸ்லீக்கு முந்தைய காலத்தில் முடியாது என்றுதான் யாரும் பதில் சொல்லியிருப்பார்கள். ஆனால் கூலி எனும் படத்தின் சண்டைக்காட்சிக்காக அமிதாப்பச்சனின் வயிற்றில் புனித் இஸார் குத்திய ஒரு குத்து அமிதாப்பை சாவின் விளிம்பிற்கே கொண்டுபோய் திரும்ப கொண்டு வந்து சேர்த்ததை யாவரும் பின்னாளில் வியக்கவே செய்தார்கள். அந்த அடியை வசதியில்லாத வேறு ஒருவர் வாங்கியிருந்தால் மகாபாரதத்திற்கு வேறு துரியோதனனைத்தான் தேடியிருக்கவேண்டும்.

Read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=606