January 29, 2009

சாமான்யனும் உன்னதமானவனும்

ஹெக்கோடு என்கிற கர்னாடக மாநில கிராமத்தில் 1977ல் ஒரு பரிசோதனை நிகழ்ந்தது. கன்னட நாடக மேதை கே.வி. சுப்பண்ணா அதுவரை சினிமாவே பார்த்திராத, தங்கள் பிராந்திய மொழியைத் தவிர வேறு மொழியறியாத கிராமத்து மக்களுக்கு, சில உலகத் திரைப்படங்களைத் திரையிட்டுக் காட்டினார்.இத்தாலிய இயக்குனர் விட்டோரியா டிசைக்காவின் பைசைக்கிள் தீவ்ஸ், ரஷ்ய இயக்குனர் ஐஸன்ஸ்டீனின் பேட்டில்ஷிப் புடோம்கின், ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசேவாவின் செவன் சாமுராய்ஸ், ஸ்வீடன் தேசத்து இயக்குனரான இங்மர் பெர்க்மனின் வைல்ட் ஸ்ட்ராபரீஸ், இந்திய வங்க இயக்குனரான சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி உள்ளிட்ட அந்தப் படங்களை மொழியையும் மீறி பாமர ஜனங்கள் புரிந்துகொண்டார்கள் என்பதோடு அவற்றை மிகவும் விரும்பவும் செய்தார்கள்.

லூமியர் சகோதரர்கள் ரயிலின் வருகையையும் பணி முடிந்து ஆலைத் தொழிளார்கள் வெளியேறுவதையும் முதல் முறையாகத் திரையிட்டுக் காட்டியதற்கும் ஹெக்கோடு பரிசோதனைக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. லூமியர் பிரதர்ஸ் இன்னதென்றே தெரியாத ஒரு வித்தையை நிகழ்த்திக் காட்டினார்கள். ஹெக்கோடு பரிசோதனை, சினிமா வளர்ந்து, உலகத் தரம் என்பதாக ஒன்று அதில் முகிழ்த்து, பெரும் மேதைகள் அந்தக் கலையில் உருவாகி, அவர்கள் கொடுத்த நல்ல படங்களை பாமர ஜனங்களுக்கு போட்டுக்காட்டிய நிகழ்வு. இதுவே பார்வையாளனின் தரத்தை நிர்ணயிக்கக்கூடிய ஆய்வு! ஆகவே இது முக்கியமானது.

அதே ஹெக்கோடு கிராமத்தில் இன்றைக்கு ஒரு பரிசோதனை செய்ய முயன்றால் கண்டிப்பாக அதைப் புறக்கணித்துவிட்டு வீட்டுக்குப் போய் டீவி பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். காரணம் சினிமா என்கிற பெயரில் ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் அடித்த லூட்டிகள் எல்லாம் அவர்களின் மூளைக்குள் புகுந்து பாதாளச் சாக்கடை போல அடைத்துக்கொண்டிருப்பதுதான்.

கடந்த அத்தியாயத்தில் போதையையும் சினிமாவையும் கலந்து ஒருசில பதிவுகள் செய்திருந்தேன். நல்ல போதத்தோடு பார்க்கும்போது சகிக்காத குத்துப்பாட்டு, சண்டைக்காட்சி உள்ளிட்ட அபத்தங்கள் குடித்துவிட்டு போதையில் பார்க்கும்போது சிறப்பாக இருப்பதாகத் தோன்றுகிறது என்பதாக.
அதன் எதிர்ப்புறத்தை இப்போது பார்க்கலாம்.

Read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=859

January 21, 2009

சரக்கும் சினிமாவும்

தமிழ் அகம் வாழ் பெரும் தகைகள் சோம பானம் சுறா பானம் ஆகியவை அருந்தாமலே நெடிதுயிலாய்க் கொண்டுள்ள போதையே தமிழ் சினிமாவின் தரத்தைத் தீர்மானித்துத் தொலைக்கிறது.


இந்தக் கூற்றை என்னாலானமட்டும் விளக்கப் பார்க்கிறேன். பொதுவாக சரக்கு என்கிற வார்த்தை அதன் உண்மையான அர்த்தத்தையும் தாண்டி மதுவகைகளுக்கான மாற்றுப் பெயராக தமிழில் உருவெடுத்து வெகு காலமாகிறபடியால் அந்த அர்த்தத்தில்தான் இந்தப் பதம் உபயோகிக்கப்படுகிறது. ஆனால் திரையில் மதுவருந்துவதுபோன்ற காட்சி வந்தால் கீழே மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று வாசகம் ஓடவேண்டும் என்கிற ஆணைகள் குறித்தெல்லாம் ஆராய்கிற கட்டுரையல்ல இது.

அதேபோல் எந்தெந்த படத்தில் யார் யார் எப்படி எப்படி குடித்தார்கள் அல்லது குடித்ததுபோல நடித்தார்கள் அல்லது குடித்துவிட்டு வந்து குடிக்காதே என்று போதனை செய்யும் காட்சியில் நடித்தார்கள் என்கிற பட்டியலை வெளியிடுவதும் எனது நோக்கமன்று!

இந்தக் கட்டுரை ஒட்டுமொத்த போதை பற்றியது. அதாவது மாஸ் மப்பு பற்றியது.

Read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=837

January 13, 2009

சினிமாவின் மூன்றாவது முகம்

யதார்த்த சினிமாவாகவோ கமர்ஷியல் நோக்கத்தோடோ இல்லாத படத்தை parrellel cinema என்று சொல்லலாமா? ம்ஹூம், சொல்லவே கூடாது! யதார்த்த சினிமா கொடுக்க முயலும் ஒரு கலைஞன் அதை பார்வையாளர்களின் பக்குவத்தையறிந்து கொடுக்க முயலும்போதே அது பாரலல் சினிமாவாக மாறுகிறது (முழுமையான யதார்த்த சினிமாவை பாரலல் சினிமா என்று சொல்லும் போக்கு உண்டு. நான் அந்தக் கோணத்தில் இந்தப் பதத்தை உபயோகிக்கவில்லை).

இதனால் பாரலல் சினிமா என்பது மொழிக்கு மொழி, நாட்டுக்கு நாடு வேறுபட்டுப் போவதும் இயல்பானதே! உதாரணமாக உன்னதமான யதார்த்த சினிமா என்று தமிழ்நாடு கொண்டாடும் ஒரு சினிமா மலையாளத்திலோ பெங்காலியிலோ கன்னடத்திலோ பாரலல் சினிமா என்பதாக அங்கீகரிக்கப்படலாம். பிரெஞ்ச்சிலோ ஈரானிலோ கமர்ஷியல் சினிமா என்பதாக ஒதுக்கப்படலாம்.

ஆகவே பாரலல் சினிமா என்பதே கலைஞர்கள் எதிர்கொள்ளும் பெரும் சவால். அதற்கு வணிக நோக்கமும் இருக்கிறது. அதே நேரத்தில் அது தரமாக இருக்கவேண்டியதும் அவசியமாகிறது. இது அவ்வளவு சாதாரணமான வித்தையல்ல.

Read more: http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=808

January 06, 2009

சினிமாவின் இரண்டாவது முகம்


தர்மப்படி பார்த்தால் யதார்த்த சினிமாதான் சினிமாவின் முதல் முகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் சினிமா என்பது சகலருக்குமான கலையாக உருவான வகையில் வர்த்தக சினிமா யதார்த்த சினிமாவை முந்திக்கொண்டு மூன்று நான்கு தப்படிகள் முன்னால் போய்விட்டது. நம் தாய்த்தமிழிலோ முந்த வேண்டிய அவசியம்கூட இல்லாமற் போயிற்று.

சினிமா என்பது கலையாக உருவாகாத காலத்தில் வெறும் ரயிலின் வருகையே பெரும் சலனத்தை ஏற்படுத்தியதாக லூமியர் பிரதர்ஸ் வரலாற்றிலிருந்து நாம் அறிகிறோம். ஒரு தொழிற்சாலையிலிருந்து பணியாளர்கள் வெளியேறும் காட்சியின் சலனமே பார்வையாளர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் உறைய வைத்த காலத்தை எப்போதோ சினிமா கடந்து வந்துவிட்டது. இருந்தாலும் இந்தத் தொடக்கத்தின் பிழையாலோ என்னவோ யதார்த்த சினிமாவை விடவும் பார்வையாளனை இருக்கை நுனிக்குத் தள்ளக்கூடிய பரபரப்பான வர்த்தக சினிமாவே அரியாசனத்தில் அமர்ந்து கோலோச்சுகிறது.

இருந்தாலும் உலக அளவில் யதார்த்த சினிமாவின் வருகையோ அதற்கான வரவேற்போ கொஞ்சமும் குறைந்திருக்கவில்லை என்பதே பேராறுதல்.

தமிழ் சினிமாவில் யதார்த்த சினிமாவை முயன்று பார்த்தவர் என்கிற பெருமை இயக்குனர் மகேந்திரனைத்தான் முதலில் சேர்கிறது. இருந்தாலும் அவரும் நல்ல யதார்த்த சினிமாவை நமக்கு வழங்கியிருக்கவில்லை.

Read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=781

January 01, 2009

சினிமாவின் மூன்று முகங்கள்

சினிமா மூன்று முதன்மை வகைமைகளில் பிரிக்கப்படலாம். அவை,
1. கமர்ஷியல் சினிமா
2. யதார்த்த சினிமா
3. பாரலல் சினிமா
இந்த மூன்றில் எது சரியானது எது பிழையானது என்று ஆராய்வது அவசியமற்றது. ஏனென்றால் இம்மூன்றின் தேவையுமே இன்றியமையாததுதான். இந்த மூன்றுமே ஒன்றோடு ஒன்று சளைத்தவை அல்ல. ஆகவே மூன்றிலும் நம் கண்களில் தென்படும் படங்களை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். இவை மூன்றுமில்லாமல் வேறொரு கொடுமைகூட இருக்கிறது அதற்கு இரண்டு பெயர்கள் உண்டு. ஒன்று மசாலா சினிமா மற்றது இந்திய சினிமா!

Read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=753