வெகு நாட்களுக்குப் பிறகு அர்த்த மண்டபத்துக்குள் நுழைகிறேன், இந்த முறை நுழைந்திருப்பது பதிவொன்றிற்காக அல்ல. அறிவிப்பொன்றிற்காக.
நண்பர் மனுஷ்ய புத்திரன் புதிதாக ஓர் இணைய வார இதழ் ஆரம்பித்திருப்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். தெரியாது என்றால் தெரிந்து கொள்ளுங்கள். அவரது www.uyirmmai.com இல் அதற்கான சுட்டி கிடைக்கும். வார இணைய இதழின் பெயர் உயிரோசை.
இந்த இதழில் தமிழ் சினிமா பற்றி ஒரு தொடர் எழுத முடியுமா என்று என்னிடம் கேட்டார். என்ன ஒரு தைரியம் பாருங்கள். யாரைப் பார்த்து என்ன கேட்பது என்று ஒரு விவஸ்தை வேண்டாம்? நான் blog எழுதுகிற லக்ஷ்ணமே நீங்கள் எல்லாம் அறிந்த ஒன்றுதானே. அறியாவிட்டால் என் பதிவுகளுக்கு இடையேயான கால அவகாசத்தை ஒரு தரம் புரட்டி பாருங்கள். என் சுறுசுறுப்பின் வேகம் உங்களுக்கும் தெரிய வரும்.
இருந்தாலும் துணிந்து இறங்கிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். அவரிடமும் அதைத்தான் சொன்னேன். யாராவது கழுத்தில் கத்தியை வைத்தால்தான் எழுதவே செய்வேன் என்பதாக. அவர் நான் துப்பாக்கியே வைப்பேன் என்று சொன்னார். இங்கே நான் விளையாட்டாக இதைக் குறிப்பிட விரும்பவில்லை. ஓர் எழுத்தாளன் அதுவரைக்குமான அவனது சாதனைகளுக்காக கௌரவிக்கப்படும்போதுதான் அவனிடம் இருந்து மேலும் மேலும் நல்ல படைப்புருவாக்கங்கள் தோன்றக்கூடும். இந்த சோர்வை நான் கோபி கிருஷ்ணனிடம் பார்த்துத் தவித்துப் போயிருக்கிறேன்.
என் தொடரின் தலைப்பு 'தமிழ் சினிமா: அமுதும் நஞ்சும்.' (நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று என்ற நாஞ்சில் நாடனின் தலைப்பிலிருந்து திருடப்பட்டது என்று உங்களிடம் யாராவது சொன்னால் அதை மறுக்க வேண்டாம்)
முதல் கட்டுரையின் தலைப்பு 'ஏன் எமது சினிமா சாகிறது?'
கட்டுரைக்கான நேரடி சுட்டி:http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=158
1 comment:
அன்புள்ள சுதேஷமித்திரன்,
நல்ல செய்தி. காக்டெயில் மாதிரி அடித்து கலக்குங்கள். :-)
Post a Comment