December 16, 2008

சீட்டுக்கோட்டை சிங்காரம்!


எல்லிஸ் டங்கன் காலத்தில் கேமராவைப் பார்க்க விரும்பினால் ஸ்டுடியோவுக்குத்தான் போகவேண்டிய நிலை இருந்தது. கதைகளும், கோட்டைகளிலும் கொத்தளங்களிலும் ஐந்தாளுயரத் தூண்கள் சார்ந்த பகுதிகளிலும் நிகழ்வதாயிருந்தன. வெளிப்புறக் காட்சி தேவைப்படின் வண்டி வண்டியாக மணல் கொட்டப்பட்டு உருவாக்கப்பட்ட குளக்கரைகளிலும் செயற்கைப்புல் பதித்த நந்தவனங்களிலும் தங்கள் திறமையைக் காட்டினார்கள் தச்சர்கள். திரைச்சீலைகள் தத்ரூபமாக வரையப்பட்டன. நிலவும் மேகமும் வரைந்து வரைந்து அவர்கள் சோர்ந்துபோயிருக்கவேண்டும். திரும்பத்திரும்பத் தேவைப்படுபவையாக அவை இருந்த காலம் அது.

அத்திக்காய் காய் காய் என்று சிவாஜி பாடும்போது அந்தத் திரைச்சீலைக்கு முன்னால் ஓர் அறையின் சுவர் உருவாக்கப்படுகிறது. பாலாஜி பாடும்போது அதே திரைச்சீலைக்கு வேறொரு சுவரும் ஜன்னலும் தேவைப்படுகிறது. பாதி ஜன்னலை மூடிவைத்தால் பாதி நிலவு கேமராவுக்குத் தெரிகிறது. ஒரிஜினல் நிலவையும் கதவையும் வைத்து இப்படியொரு காட்சி எடுக்க வேண்டுமானால், ஒருசில கோவில்களில், வருடத்தில் ஒரு நாள் மாத்திரம் மூலஸ்தானம் வரைக்கும் சூரியன் நுழைகிறதே, அதுமாதிரி காத்திருக்கவேண்டும்.

Read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=693

No comments: