December 23, 2008

மலையாள சினிமாவுக்கு ஒரு முன்னெச்சரிக்கை!

மலையாள சினிமாவுக்கு ஒரு முன்னெச்சரிக்கை!

'தமிழர்களுக்கு உங்கள் கதைகளை விற்காதீர்கள்!'
தமிழ் சினிமாவுக்கு ஒரு முன்னெச்சரிக்கை!
'மலையாளிகளிடம் கதை வாங்காதீர்கள்!'
இந்த இரண்டு எச்சரிக்கைகளையும் மீறுவதால் என்ன நடந்துவிடும்? பெரிதாக எதுவும் நடந்துவிடாது. 'மலையாளிகள் மேதைகள் என்பதையும் தமிழர்கள் தற்குறிகள் என்பதையும் உலகம் புரிந்துகொண்டுவிடும். அவ்வளவுதான்!'

Read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=723

December 16, 2008

சீட்டுக்கோட்டை சிங்காரம்!


எல்லிஸ் டங்கன் காலத்தில் கேமராவைப் பார்க்க விரும்பினால் ஸ்டுடியோவுக்குத்தான் போகவேண்டிய நிலை இருந்தது. கதைகளும், கோட்டைகளிலும் கொத்தளங்களிலும் ஐந்தாளுயரத் தூண்கள் சார்ந்த பகுதிகளிலும் நிகழ்வதாயிருந்தன. வெளிப்புறக் காட்சி தேவைப்படின் வண்டி வண்டியாக மணல் கொட்டப்பட்டு உருவாக்கப்பட்ட குளக்கரைகளிலும் செயற்கைப்புல் பதித்த நந்தவனங்களிலும் தங்கள் திறமையைக் காட்டினார்கள் தச்சர்கள். திரைச்சீலைகள் தத்ரூபமாக வரையப்பட்டன. நிலவும் மேகமும் வரைந்து வரைந்து அவர்கள் சோர்ந்துபோயிருக்கவேண்டும். திரும்பத்திரும்பத் தேவைப்படுபவையாக அவை இருந்த காலம் அது.

அத்திக்காய் காய் காய் என்று சிவாஜி பாடும்போது அந்தத் திரைச்சீலைக்கு முன்னால் ஓர் அறையின் சுவர் உருவாக்கப்படுகிறது. பாலாஜி பாடும்போது அதே திரைச்சீலைக்கு வேறொரு சுவரும் ஜன்னலும் தேவைப்படுகிறது. பாதி ஜன்னலை மூடிவைத்தால் பாதி நிலவு கேமராவுக்குத் தெரிகிறது. ஒரிஜினல் நிலவையும் கதவையும் வைத்து இப்படியொரு காட்சி எடுக்க வேண்டுமானால், ஒருசில கோவில்களில், வருடத்தில் ஒரு நாள் மாத்திரம் மூலஸ்தானம் வரைக்கும் சூரியன் நுழைகிறதே, அதுமாதிரி காத்திருக்கவேண்டும்.

Read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=693

December 08, 2008

காஸ்ட்யூமரை நிர்வாணமாக்கும் கலை!

தமிழ்த் தேயம் நிர்வாணத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது. என்னதான் போதிசத்வர் நார்த் இண்டியன் என்றாலும் சித்தர்களின் ஆளுமை ஒரு காலத்தில் இந்தத் தேயத்தில் இருந்த வகையில் மகா நிர்வாணத்தை நோக்கி இது நகரும் என்று ஒரு நப்பாசை இருந்தது. ஆனால் அவர்களுக்குத் தெரியாது, சினிமா என்று ஒரு மாயையில் இத்தேயம் சிக்குறும் என்பதும், அது மகாவைக்கூட நிர்வாணமாக்க முயலும் என்பதும். நிர்வாணமே சாத்தியமில்லாதபோது மகாநிர்வாணம் எப்படி சாத்தியமாகும்?

நிர்வாணம் மிகமிக அழகானது அல்லது மிக மிக அசிங்கமானது. அதை எந்த வகைமையில் சேர்க்கலாம் என்பது சம்பந்தப்பட்ட உடலைப் பொறுத்தே அமைகிறது. சிங்கத்தின் நிர்வாணம் எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறது! அதே நேரத்தில் கவர்ச்சி நடிகை ஷகீலாவின் நிர்வாணம் முழுமையாக உங்களுக்குக் காணக் கிடைத்தால் அது கண்டிப்பாக, கவர்ச்சிக்கு பதிலாகக் குமட்டலையே ஏற்படுத்தக்கூடும். ஏனென்றால் க்ளிவேஜின் பிதுங்கலில் உள்ள கவர்ச்சி, தொய்ந்த மார்பகங்களிலும் இடுப்புச் சதைகளிலும் இல்லவே இல்லை. இதுவே சினிமாவின் அடிப்படை மொழி!
Read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=635

December 04, 2008

அடி உதவுகிற மாதிரி

அடி உதவுகிற மாதிரி அக்கா தங்கைகூட உதவுவதில்லை என்று பெண்பால் பழமொழி ஒன்று உண்டு. அது யாருக்கு செல்லுபடியாகிறதோ இல்லையோ, சினிமாவுக்கு மட்டும் சரியாகப் பொருந்தி வருகிறது.

ப்ரூஸ்லீ நடித்து வெளியான என்டர் தி டிராகன், ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி ஆகிய ஆங்கிலப் படங்களைத் தமிழ்ப்படங்கள் என்பதாகவே கொள்ளலாம். எம்ஜியார், சிவாஜி படங்களைவிட பிரமாதமாக அவை தமிழ்நாட்டில் ஓடின. அவற்றைப் பார்க்காத இளைஞர்களே அந்த சமயத்தில் இருந்திருக்க முடியாது.

வகைதொகையில்லாமல் அடிப்பதற்கு பதிலாக முறையாக அடிப்பதற்கு, 'வெறும் கரத்தால்' எனும் பொருள்படும் கராத்தே என்கிற கலை மூலமாக பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திய படம் அது. அப்படி ஒரே அடியில் எதிரியை சாய்த்துவிட முடியுமா என்று கேட்டால் ப்ரூஸ்லீக்கு முந்தைய காலத்தில் முடியாது என்றுதான் யாரும் பதில் சொல்லியிருப்பார்கள். ஆனால் கூலி எனும் படத்தின் சண்டைக்காட்சிக்காக அமிதாப்பச்சனின் வயிற்றில் புனித் இஸார் குத்திய ஒரு குத்து அமிதாப்பை சாவின் விளிம்பிற்கே கொண்டுபோய் திரும்ப கொண்டு வந்து சேர்த்ததை யாவரும் பின்னாளில் வியக்கவே செய்தார்கள். அந்த அடியை வசதியில்லாத வேறு ஒருவர் வாங்கியிருந்தால் மகாபாரதத்திற்கு வேறு துரியோதனனைத்தான் தேடியிருக்கவேண்டும்.

Read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=606

November 25, 2008

காமெடியும் கீமாவடையும்!

காமெடி என்றால் நகைச்சுவை என்றும் கீமாவடை அல்லது கீமெடி என்றால் தர்ம அடி என்றும் தற்காலத் தமிழ் சினிமா நிகண்டுவில் ஒரு வரி காண்கிறது. அதாவது கொத்துக்கறி போடுவது!

கடந்த வாரம் சட்டக்கல்லூரி மாணவர்களின் கைவரிசை (உருட்டுக்கட்டை வரிசை?) குறித்து ஒரு ரவுண்டு புலம்பியிருந்தேன். சினிமா வார்த்துக் கொடுக்கும் வன்முறைக் காட்சிகள் இளைஞர்கள் மத்தியில் எவ்விதமான மனச்சிதைவை ஏற்படுத்துகின்றன என்கிற புலம்பல் அது! கடந்த இதழில் மாயாவின் கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைப்போல அடி வாங்குபவன் நல்லவன் என்கிற மனநிலைதான் நமக்கு இப்போதும் இருப்பதற்கு மிக முக்கிய காரணமும் சினிமாதான் என்றே தோன்றுகிறது.

அடிப்பது உதைப்பது ஆகியவை ஹீரோக்களும் வில்லன்களும் அடியாட்களும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் உதவியோடு சாதிக்கும் கலை என்பதெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரைதான். அதன்பிறகு டிரென்ட் மாறுகிறது! கௌண்டமணி செந்திலை உதைப்பதிலிருந்து இது தொடங்கியிருக்கலாம் (அல்லது பாரதிராஜாவின் 16 வயதினிலேயில் ரஜினிகாந்த் கௌண்டமணியை அடிப்பதிலிருந்து இது தொடங்கியிருக்கலாம். அந்த அடியைத்தான் கௌண்டர் போகிறவன் வருகிறவனுக்கெல்லாம் தவணை முறையில் கொடுத்துவந்தார் என்பதாகவும் கொள்ளலாம்).

read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=569

November 20, 2008

நான் மதிக்கும் கலைஞர்கள் செய்த பிழைகள்!

நாகார்ஜுன் நடித்த இரண்டு தெலுங்குப் படங்கள் தமிழில் தறிகெட்டு ஓடின. ஒன்று மணிரத்னம் இயக்கிய கீதாஞ்சலி. மற்றது ராம்கோபால் வர்மா இயக்கிய சிவா! தமிழில் டப் செய்யப்பட்டபோது இவற்றின் பெயர்கள் இதயத்தைத் திருடாதே, உதயம்!

இதயத்தைத் திருடாதேயில் நாகார்ஜுன் ஒரு நோயாளி. தன் நோயை அறிந்துகொள்ளும் வரைக்கும் கல்லூரி கான்வகேஷனில் காம்பௌன்ட் சுவரைத் தாண்டி தாமதமாக நுழையும் அளவுக்குத்தான் இவரது மாணவ சேஷ்டை இருக்கும். ஆனால் உதயத்தில் அப்படியே தலைகீழ். ஆரம்பத்தில் மிக அமைதியான மாணவனாகத் தோற்றமளிக்கிற இவர், ஒரு பாய்லிங் பாய்ண்ட்டில் வெடித்து தன் சைக்கிளின் செயினை அறுத்தெடுக்கும்போது படம் வேறு தாளகதிக்குள் நுழைந்துவிடும். கல்லூரிக்குள் மாணவர்கள் மோதல் என்பது ரொம்பவும் அழுத்தமாக வெளிவந்தது அந்தப்படம் முதலாகத்தான் என்பதாகவே நினைக்கிறேன். மாணவர்கள் தங்களுக்குள் ஆயுதங்களால் தாக்கிக்கொள்வது, தாதாக்கள் கல்லூரிகளுக்குள் ஊடுருவுவது, அதற்குக் காரணமாக இருக்கும் மாணவர்கள் பிற்பாடு தாதாக்களாகவும் அரசியல்வாதிகளாகவும் மாறுவது என்பதாக ஒரு பேரமைப்பை எடுத்துக்காட்டிய படம் உதயம்...

read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=537

November 12, 2008

துடிக்கத் துடிக்க நடிக்க...

தமிழ் சினிமாவில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்? யாரெல்லாம் துடிக்கிறார்கள்? வாருங்கள் உயிரோசை இந்த வார பதிவுக்கு:
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=485

November 04, 2008

உலக சினிமாவுக்கான ஏணி!

நமது படங்கள் உலக தரத்திற்கு உயர்ந்து கொண்டிருக்கின்றன என்பதாக ஒரு மாயை உருவாகி வருகிற சூழலில் அது எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்த வார உயிரோசை தொடரில் முயன்று பார்த்திருக்கிறேன்.

சுட்டி இதோ: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=445

October 28, 2008

விருதோ விருது!

விருதுகள் எந்தத் தகுதியினடிப்படையில் வழங்கப்படுகின்றன? இப்படிப் பொத்தாம் பொதுவாகக் கேட்டால் எப்படி பதில் சொல்ல முடியும் என்று கேட்கிறீர்களா? நியாயம்தான்! இந்த வாரம் உயிரோசைக்கு தமிழ் சினிமா கலைஞர்கள் கௌரவிக்கப்பட்ட லட்சணம் குறித்துதான் சற்று விவாதங்களை முன்வைத்திருக்கிறறேன்.
சுட்டி இதோ:
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=412

October 22, 2008

முலைகளின் ரகசியம்!

சினிமாவில் வருகிற பூதங்கள்தான் பூதங்களா? சினிமாவே ஒரு மாபெரும் பூதம்தானே! எமது தமிழ் சினிமாவில் யதார்த்தம் என்பதாக ஒன்று ஏன் முழு வீச்சோடு வெளிப்படவே இல்லை?

இந்த ஆதங்கம் உலக சினிமா குறித்து எள்ளளவேனும் அறிந்த யாருக்கும் பொதுவானதுதானே!

இதுதான் எனது இந்தவார உயிரோசை பதிவுக்கான களம்!

தலைப்பு 'சினிமா பூதம்!'

சுட்டி: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=365

October 14, 2008

காதலில் விழுந்த சினிமா!


நீங்கள் எத்தனை பேரைக் காதலித்திருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. நான் நாலைந்து பேரைக் காதலித்திருக்கிறேன். ஆனால் எனக்குள் இந்தக் காதல் என்கிற உணர்வு தானாக எழுந்ததா அல்லது அதை எங்காவது பார்த்து நான் கற்றுக்கொண்டேனா என்று கேட்டால் கண்டிப்பாக அதை எனக்குக் கற்றுக் கொடுத்தது செல்லுலாய்ட்தான் என்பதே தெளிவு. நீங்களும் யோசித்துப் பாருங்கள், உங்களுக்கும் இது புரியும்.

எனது இந்த வார உயிரோசை கட்டுரை இந்த விஷயத்தைதான் முன் வைக்கிறது.

தலைப்பு: 'காதல் இல்லாத சினிமா!'

சுட்டி இதோ: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=308

October 07, 2008

சினிமாவுக்கு இனியும் சென்சார் தேவையில்லை


இந்த வார உயிரோசையில் சினிமாவுக்கு சென்சார் தேவையா இல்லையா என்பதை பற்றிய எனது கருத்தினை எழுதியிருக்கிறேன். சென்சார் எனும் சவரக்கத்தி என்பது தலைப்பு. அனுப்பிய பிறகு அதைவிட நல்ல தலைப்பு ஒன்று தோன்றித் தொலைத்து. அதுதான் நீங்கள் இங்கே காண்பது.

'சினிமாவுக்கு இனியும் சென்சார் தேவையில்லை'.

இந்தக் கட்டுரையின் வாயிலாக சென்சார் என்பது எந்த பாலினத்தின் வெளிப்பாடு என்பதை கண்டடைய முடிந்திருக்கிறது. சுட்டி இதோ: http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=267

September 30, 2008

சர்வம் ஹீரோ மயம்!

இன்னும் ஒரு சுட்டிக்கான பதிவு. வார வாரம் இந்த தொல்லை வேறு உங்களுக்கு. இந்த உயிரோசை இதழில் என் கட்டுரை ஹீரோ என்பவன் யார் என்று பேசுகிறது. சுட்டி இதோ: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=239

September 24, 2008

உயிரோசை உலா


மனுஷ்ய புத்திரனின் உயிரோசை இணைய இதழ் அசத்தலாக வந்துகொண்டிருக்கிறது. உன் தொடர் வருவதால் நீ அப்படித்தான் சொல்வாய் என்று சொல்பவர்கள் ஒரு நடை பொய் பார்த்து விட்டு சொல்லுங்கள். முக்கியமாக ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும். இந்த வாரம் நான் எழுதியுள்ள கட்டுரையை வாசித்து பாருங்கள். இந்தக் கட்டுரையை வணிக இதழ்கள் வெளியிட விரும்புமா என்று கவனியுங்கள். அப்போதுதான் ஒரு நல்ல இணைய இதழின் முக்கியத்துவம் உங்களுக்கு விளங்கும். வெளிப்படையான எழுத்துக்களுக்கு தமிழில் சிற்றிதழ்களை விட்டால் வேறு புகல் இல்லை. இணையத்திலோ யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற சுதந்திரம் இருப்பதால் பெரும்பாலான எழுத்துகள் விளையாட்டாகவே பதிவாகின்றன. உயிரோசை மாதிரியான பரிபூரண இணைய வார இதழ் இதுவரை வந்ததில்லை என்பதாகவே தோன்றுகிறது. இதழ் அச்சுக்கும் தாவும் நாளை ரொம்ப ஆசையோடு எதிர்பார்க்கிறேன். என் இந்த வார கட்டுரைக்கான சுட்டி: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=199

September 16, 2008

புதிய இணைய இதழ்! புதிய கட்டுரைத் தொடர்!

வெகு நாட்களுக்குப் பிறகு அர்த்த மண்டபத்துக்குள் நுழைகிறேன், இந்த முறை நுழைந்திருப்பது பதிவொன்றிற்காக அல்ல. அறிவிப்பொன்றிற்காக.

நண்பர் மனுஷ்ய புத்திரன் புதிதாக ஓர் இணைய வார இதழ் ஆரம்பித்திருப்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். தெரியாது என்றால் தெரிந்து கொள்ளுங்கள். அவரது
www.uyirmmai.com இல் அதற்கான சுட்டி கிடைக்கும். வார இணைய இதழின் பெயர் உயிரோசை.

இந்த இதழில் தமிழ் சினிமா பற்றி ஒரு தொடர் எழுத முடியுமா என்று என்னிடம் கேட்டார். என்ன ஒரு தைரியம் பாருங்கள். யாரைப் பார்த்து என்ன கேட்பது என்று ஒரு விவஸ்தை வேண்டாம்? நான் blog எழுதுகிற லக்ஷ்ணமே நீங்கள் எல்லாம் அறிந்த ஒன்றுதானே. அறியாவிட்டால் என் பதிவுகளுக்கு இடையேயான கால அவகாசத்தை ஒரு தரம் புரட்டி பாருங்கள். என் சுறுசுறுப்பின் வேகம் உங்களுக்கும் தெரிய வரும்.

இருந்தாலும் துணிந்து இறங்கிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். அவரிடமும் அதைத்தான் சொன்னேன். யாராவது கழுத்தில் கத்தியை வைத்தால்தான் எழுதவே செய்வேன் என்பதாக. அவர் நான் துப்பாக்கியே வைப்பேன் என்று சொன்னார். இங்கே நான் விளையாட்டாக இதைக் குறிப்பிட விரும்பவில்லை. ஓர் எழுத்தாளன் அதுவரைக்குமான அவனது சாதனைகளுக்காக கௌரவிக்கப்படும்போதுதான் அவனிடம் இருந்து மேலும் மேலும் நல்ல படைப்புருவாக்கங்கள் தோன்றக்கூடும். இந்த சோர்வை நான் கோபி கிருஷ்ணனிடம் பார்த்துத் தவித்துப் போயிருக்கிறேன்.

என் தொடரின் தலைப்பு 'தமிழ் சினிமா: அமுதும் நஞ்சும்.' (நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று என்ற நாஞ்சில் நாடனின் தலைப்பிலிருந்து திருடப்பட்டது என்று உங்களிடம் யாராவது சொன்னால் அதை மறுக்க வேண்டாம்)

முதல் கட்டுரையின் தலைப்பு 'ஏன் எமது சினிமா சாகிறது?'

கட்டுரைக்கான நேரடி சுட்டி:
http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=158