November 25, 2008

காமெடியும் கீமாவடையும்!

காமெடி என்றால் நகைச்சுவை என்றும் கீமாவடை அல்லது கீமெடி என்றால் தர்ம அடி என்றும் தற்காலத் தமிழ் சினிமா நிகண்டுவில் ஒரு வரி காண்கிறது. அதாவது கொத்துக்கறி போடுவது!

கடந்த வாரம் சட்டக்கல்லூரி மாணவர்களின் கைவரிசை (உருட்டுக்கட்டை வரிசை?) குறித்து ஒரு ரவுண்டு புலம்பியிருந்தேன். சினிமா வார்த்துக் கொடுக்கும் வன்முறைக் காட்சிகள் இளைஞர்கள் மத்தியில் எவ்விதமான மனச்சிதைவை ஏற்படுத்துகின்றன என்கிற புலம்பல் அது! கடந்த இதழில் மாயாவின் கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைப்போல அடி வாங்குபவன் நல்லவன் என்கிற மனநிலைதான் நமக்கு இப்போதும் இருப்பதற்கு மிக முக்கிய காரணமும் சினிமாதான் என்றே தோன்றுகிறது.

அடிப்பது உதைப்பது ஆகியவை ஹீரோக்களும் வில்லன்களும் அடியாட்களும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் உதவியோடு சாதிக்கும் கலை என்பதெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரைதான். அதன்பிறகு டிரென்ட் மாறுகிறது! கௌண்டமணி செந்திலை உதைப்பதிலிருந்து இது தொடங்கியிருக்கலாம் (அல்லது பாரதிராஜாவின் 16 வயதினிலேயில் ரஜினிகாந்த் கௌண்டமணியை அடிப்பதிலிருந்து இது தொடங்கியிருக்கலாம். அந்த அடியைத்தான் கௌண்டர் போகிறவன் வருகிறவனுக்கெல்லாம் தவணை முறையில் கொடுத்துவந்தார் என்பதாகவும் கொள்ளலாம்).

read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=569

No comments: