December 06, 2005

சாம்பலின் மறுவருகை

சாம்பல் விரும்பிகளுக்கு ஓர் நற்செய்தி!வரும் சென்னை புத்தகத் திருவிழாவில் மீண்டும் உங்கள் கண்ணில் விழப்போகிறது சாம்பல். அறியாதவர்களுக்காக ஒரு சிறு முன்னுரை. சாம்பல் தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் அறியப்பட்ட சிற்றிதழ். அதன் வடிவமைப்பும் உள்ளடக்கமும் பலராலும் குறிப்பிடப்பட்டது. அண்மையில் காலமான எழுத்தாளர் சுந்தரராமசாமியின் புகைப்படத்தை முன்னட்டையில் வெளயிட்டு அவரை கெளரவப்படுத்திய முதல் இதழ் சாம்பல்தான். அந்த இதழில் புதுவை இளவேனிலின் புகைப்பட காலரி ஒன்றும் இருந்தது. அத்தனை புகைப்படங்களிலும் சுந்தரராமசாமிதான் இடம்பெற்றிருந்தார். தமிழ் சிற்றிதழ்களின் பேரணியில் குழந்தை இலக்கியத்துக்காக சில பக்கங்களை ஒதுக்கிய ஒரே இதழும் சாம்பல்தான். இயக்குனர் சேரனின் ஆட்டோகிராப் திரைப்படத்திற்கு சாம்பலில் வெளிவந்த விமர்சனம்தான் ஆகச்சிறந்ததாக அறியப்பட்டது. இவற்றையெல்லாம் கூட மறந்துபோய்விட்டவர்கள் சாம்பலில் வெளிவந்த ஒரு கவிதைக்காக சங்கரராமசுப்பிரமணியன் ஒருசிலரால் துன்புறுத்தப்பட்டதை நிச்சயம் நினைவு வைத்திருப்பார்கள். இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஓவியம், புகைப்படம், இதர கலைகள் என தன் வெளியைத் தீர்மானித்திருப்பது சாம்பல்.மீண்டும்...

No comments: