January 06, 2009

சினிமாவின் இரண்டாவது முகம்


தர்மப்படி பார்த்தால் யதார்த்த சினிமாதான் சினிமாவின் முதல் முகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் சினிமா என்பது சகலருக்குமான கலையாக உருவான வகையில் வர்த்தக சினிமா யதார்த்த சினிமாவை முந்திக்கொண்டு மூன்று நான்கு தப்படிகள் முன்னால் போய்விட்டது. நம் தாய்த்தமிழிலோ முந்த வேண்டிய அவசியம்கூட இல்லாமற் போயிற்று.

சினிமா என்பது கலையாக உருவாகாத காலத்தில் வெறும் ரயிலின் வருகையே பெரும் சலனத்தை ஏற்படுத்தியதாக லூமியர் பிரதர்ஸ் வரலாற்றிலிருந்து நாம் அறிகிறோம். ஒரு தொழிற்சாலையிலிருந்து பணியாளர்கள் வெளியேறும் காட்சியின் சலனமே பார்வையாளர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் உறைய வைத்த காலத்தை எப்போதோ சினிமா கடந்து வந்துவிட்டது. இருந்தாலும் இந்தத் தொடக்கத்தின் பிழையாலோ என்னவோ யதார்த்த சினிமாவை விடவும் பார்வையாளனை இருக்கை நுனிக்குத் தள்ளக்கூடிய பரபரப்பான வர்த்தக சினிமாவே அரியாசனத்தில் அமர்ந்து கோலோச்சுகிறது.

இருந்தாலும் உலக அளவில் யதார்த்த சினிமாவின் வருகையோ அதற்கான வரவேற்போ கொஞ்சமும் குறைந்திருக்கவில்லை என்பதே பேராறுதல்.

தமிழ் சினிமாவில் யதார்த்த சினிமாவை முயன்று பார்த்தவர் என்கிற பெருமை இயக்குனர் மகேந்திரனைத்தான் முதலில் சேர்கிறது. இருந்தாலும் அவரும் நல்ல யதார்த்த சினிமாவை நமக்கு வழங்கியிருக்கவில்லை.

Read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=781

No comments: