January 29, 2009

சாமான்யனும் உன்னதமானவனும்

ஹெக்கோடு என்கிற கர்னாடக மாநில கிராமத்தில் 1977ல் ஒரு பரிசோதனை நிகழ்ந்தது. கன்னட நாடக மேதை கே.வி. சுப்பண்ணா அதுவரை சினிமாவே பார்த்திராத, தங்கள் பிராந்திய மொழியைத் தவிர வேறு மொழியறியாத கிராமத்து மக்களுக்கு, சில உலகத் திரைப்படங்களைத் திரையிட்டுக் காட்டினார்.இத்தாலிய இயக்குனர் விட்டோரியா டிசைக்காவின் பைசைக்கிள் தீவ்ஸ், ரஷ்ய இயக்குனர் ஐஸன்ஸ்டீனின் பேட்டில்ஷிப் புடோம்கின், ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசேவாவின் செவன் சாமுராய்ஸ், ஸ்வீடன் தேசத்து இயக்குனரான இங்மர் பெர்க்மனின் வைல்ட் ஸ்ட்ராபரீஸ், இந்திய வங்க இயக்குனரான சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி உள்ளிட்ட அந்தப் படங்களை மொழியையும் மீறி பாமர ஜனங்கள் புரிந்துகொண்டார்கள் என்பதோடு அவற்றை மிகவும் விரும்பவும் செய்தார்கள்.

லூமியர் சகோதரர்கள் ரயிலின் வருகையையும் பணி முடிந்து ஆலைத் தொழிளார்கள் வெளியேறுவதையும் முதல் முறையாகத் திரையிட்டுக் காட்டியதற்கும் ஹெக்கோடு பரிசோதனைக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. லூமியர் பிரதர்ஸ் இன்னதென்றே தெரியாத ஒரு வித்தையை நிகழ்த்திக் காட்டினார்கள். ஹெக்கோடு பரிசோதனை, சினிமா வளர்ந்து, உலகத் தரம் என்பதாக ஒன்று அதில் முகிழ்த்து, பெரும் மேதைகள் அந்தக் கலையில் உருவாகி, அவர்கள் கொடுத்த நல்ல படங்களை பாமர ஜனங்களுக்கு போட்டுக்காட்டிய நிகழ்வு. இதுவே பார்வையாளனின் தரத்தை நிர்ணயிக்கக்கூடிய ஆய்வு! ஆகவே இது முக்கியமானது.

அதே ஹெக்கோடு கிராமத்தில் இன்றைக்கு ஒரு பரிசோதனை செய்ய முயன்றால் கண்டிப்பாக அதைப் புறக்கணித்துவிட்டு வீட்டுக்குப் போய் டீவி பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். காரணம் சினிமா என்கிற பெயரில் ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் அடித்த லூட்டிகள் எல்லாம் அவர்களின் மூளைக்குள் புகுந்து பாதாளச் சாக்கடை போல அடைத்துக்கொண்டிருப்பதுதான்.

கடந்த அத்தியாயத்தில் போதையையும் சினிமாவையும் கலந்து ஒருசில பதிவுகள் செய்திருந்தேன். நல்ல போதத்தோடு பார்க்கும்போது சகிக்காத குத்துப்பாட்டு, சண்டைக்காட்சி உள்ளிட்ட அபத்தங்கள் குடித்துவிட்டு போதையில் பார்க்கும்போது சிறப்பாக இருப்பதாகத் தோன்றுகிறது என்பதாக.
அதன் எதிர்ப்புறத்தை இப்போது பார்க்கலாம்.

Read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=859

1 comment:

venkatramanan said...

சுதேசமித்திரன்!

செப்டம்பரில் இந்தத் தொடர் வெளிவந்த நாள் முதல் படித்தும் சேமித்தும் வருகிறேன். நேரடி அனுபவங்களும், சுவாரசியமான, கூர்மையான அவதானங்களுமாய் பிரமாதமாய் போய்க்கொண்டிருக்கிறது தொடர்! வாழ்த்துக்கள்!
தொடர்ந்து எழுதவும்!
(சுஜாதாவுக்கு எஸ்.ஏ.பி. எழுதின அளவிற்கு இந்த வரிக்கு இங்கே முக்கியத்துவம் இல்லேன்னாலும், எந்த ஒரு எழுத்தாளனுக்கும் தேவைப்படும் குறைந்தபட்ச அங்கீகாரம் என்ற அளவில்...)

அன்புடன்
வெங்கட்ரமணன்